×

மருத்துவர்கள் கவனக்குறைவால் குழந்தை தொடையில் 18 நாள் சிக்கியிருந்த ஊசி: ஊரக சுகாதாரத்துறை இயக்குனர் பதில் அளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை:  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், எம்.எஸ்.ஆர் புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி மலர்விழி. தம்பதிக்கு கடந்த மாதம் 20ம் தேதி மேட்டுப்பாளையம் அரசு  மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது செவிலியர் ஒருவர் குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளார். ஊசி போட்ட இடத்தில் சிறிதாக வீக்கம் இருந்துள்ளது. இந்த வீக்கம் நாளடைவில் பெரிதாகியுள்ளது. இதையடுத்து அந்த இடத்தை, மலர்விழியின் தாய் பார்த்துள்ளார். அதில் தடுப்பூசியின் நுனி பகுதி உடைந்து சிக்கி இருப்பது தெரியவந்தது. இதனை பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அலட்சியமாக செயல்பட்ட செவிலியர் சரஸ்வதி மீது, உரிய நடவடிக்கை எடுக்கும்படி குழந்தையின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான செய்தி, நாளிதழ்களில் வெளியானது. இதனை பார்த்த மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ் தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்காக விசாரணைக்கு எடுத்தார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரத்துறை இயக்குனர் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டார்.

Tags : Doctors negligence,needle, Human Rights Commissio, answer
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...