×

மெட்ரோ ரயிலில் 8 மாதத்தில் 1.91 கோடி பேர் பயணம்: நிர்வாகம் தகவல்

சென்னை: மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 29 லட்சத்து 65 ஆயிரத்து 307 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் குறிப்பிட்ட 19 நாட்களில் மட்டும் நாள்தோறும் 1 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். அதன்படி, ஆகஸ்ட் 30ம் தேதி 1 லட்சத்து 30 ஆயிரத்து 288 பேரும், ஆகஸ்ட் 14ம் தேதி 1 லட்சத்து 15 ஆயிரத்து 477 பேரும், ஆகஸ்ட் 9ம் தேதி 1 லட்சத்து 14 ஆயிரத்து 399 பேரும், ஆகஸ்ட் 28ம் தேதி 1 லட்சத்து 12 ஆயிரத்து 984 பேரும் பயணம்  செய்துள்ளனர். இதேபோல், ஜனவரி 2019 முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் 1 கோடியே 91 லட்சத்து 44 ஆயிரத்து 307 பேர் 8 மாதத்தில் மட்டும் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : passengers ,train , 1.91 crore, passengers , Metro train,admin
× RELATED சேலம் – கொச்சி விமானம் திடீர் ரத்து: 50...