×

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தால் 8,830 கோடி தொழில் முதலீடு: தமிழக அரசுக்கு ராமதாஸ் வாழ்த்து

சென்னை: வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் மூலம் 8,830 கோடி தொழில் முதலீடுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டதற்கு தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பயணத்தின் போது, தமிழ்நாட்டில் ரூ.8,830 கோடி முதலீடு செய்வதற்கான 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.  

அமெரிக்காவிலும், துபாயிலும் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பல பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து தமிழக அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி  வருகின்றனர்.உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார மந்தநிலை நிலவி வரும் சூழலில் முதல்வரின் பயணத்தில் ₹8,830 கோடிக்கு முதலீடுகள் திரட்டப்பட்டிருப்பதும், அதன்மூலம் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படுவதும்  மகிழ்ச்சியளிக்கும் விஷயங்கள்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : Ramadas ,government ,Tamil Nadu , Ramadas congratulates, Tamil Nadu ,government,
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...