×

நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: பாக்ஜலசந்தி கடலில் பலத்த காற்று வீசிய நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள், கடந்த சில நாட்களாக மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர். காற்றின் வேகம் கட்டுக்குள் வந்த நிலையில் கடந்த 6ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து திரும்பினர். இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் தங்களது படகுகளை வழி மறித்து, மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசி விரட்டியதாக அவர்கள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் வழக்கம்போல் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

நடுக்கடலில் மீன் பிடித்தபோது அப்பகுதியில் ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை வழிமறித்து விரட்டியடித்தனர். ஒரு சில படகுகளில் வலைகளை வெட்டி கடலில் வீசினர். இதனால் மீனவர்கள் அவசரமாக படகுகளை வேறு பகுதிக்கு ஓட்டிச்சென்று மீன் பிடித்து நேற்று காலை கரை திரும்பினர்.நான்கு நாட்களுக்குள் 2வது முறையாக இலங்கை கடற்படையினர் அத்துமீறலில் ஈடுபட்டதால், தொடர்ந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லவே அச்சமாக உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்



Tags : Rameshwaram ,fishermen ,Mediterranean , Mediterranean, Rameswaram, Fishermen
× RELATED இனி மணலில் நடக்க தேவையில்லை தனுஷ்கோடி...