×

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அன்னதான திட்டம் விரிவுபடுத்துவது கைவிடப்பட்டதா? ஆணையர் பணீந்திரரெட்டி விளக்கம்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2002ம் ஆண்டு அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 2 கோயில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டது. தொடர்ந்து 2011ல் மேலும் 106 கோயில்களில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அதன்பிறகு 2012-13ல் 50 கோயில்களிலும், 2013-14ல் 100 கோயில்களிலும், 2014-15ல் 106 கோயில்களிலும், 2016-17ல் 30 கோயில்களிலும் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டது. கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்டதில் 206 கோயில்களில் இந்த திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இதுகுறித்து அறநிலையத்துறை ஆணையர் பணீந்திரரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:

754 கோயில்களில் அன்னதான திட்டம் நடந்து வருகிறது. 2018-19ம் ஆண்டில் இந்த திட்டத்தின் கீழ் 65,735 பக்தர்கள் பயன்பெற்றுள்ளனர். நாளொன்றுக்கு 16.43 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2012 முதல் ஸ்ரீரங்கம், பழனி கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் துவங்கப்பட்டு நடந்து வருகிறது. இத்திட்டத்தின்படி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை உணவு அருந்தலாம். இதன் மூலம் இக்கோயில்களில் 2018-19ம் நிதியாண்டில் நாளொன்றுக்கு 8,200 பேர் பயன்பெற்று வருகின்றனர். இதற்கென நாளொன்றுக்கு இவ்விரு கோயில்களால் ₹2.05 லட்சம் செலவிடப்படுகிறது. அன்னதான திட்டத்தை விரிவுபடுத்த சட்டசபையில் அறிவிப்பு ஏதும் அறிவிக்கப்படவில்லை.

Tags : Painendra Reddy ,department , Department of Charities, Temples, Annanatha Project, Commissioner Painendra Reddy
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...