×

பள்ளிகளில் ‘பிளாஸ்டிக்’கிற்கு தடை : கல்வித்துறை உத்தரவு

சென்னை: அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு பள்ளிக்கல்வித்துறை தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய  சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  மத்திய அரசின் தூய்மை இந்திய திட்டத்தின் கீழ் நடப்பாண்டு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 11 ) முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை தமிழகம் முழுவதுள்ள அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அதன்படி ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல், பயன்பாட்டில் இருந்து நீக்குதல், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பொருட்களை சேகரித்து மறுசுழற்சிக்கு உட்படுத்துதல் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்த வேண்டும்.

நம் மாநிலத்தில் பள்ளிகளில் ஏற்கனவே ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பள்ளி வளாகம் மற்றும் அதற்கு அருகே உள்ள இடங்களில் இருந்து, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க வேண்டும். அக்டோபர் 3 முதல் 27ம் தேதி தீபாவளி பண்டிகை வரை பிளாஸ்டிக் பொருட்களை உள்ளூர் தன்னார்வலர்களின் உதவியுடன் சேகரித்து, மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை மாணவர்கள், உள்ளூர் தன்னார்வலர்களுடன் இணைந்து சேகரித்தல், அவற்றை மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் இதுதொடர்பான அறிவுறுத்தல்களை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : schools , Schools, Plastic, Education
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...