முதல்வருக்கு ஜி.கே.வாசன்வாழ்த்து

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வர் கடந்த மாதம் 28ம் தேதி சென்னையிலிருந்து இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய 3 நாடுகளுக்கு 13 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக சென்று 10ம் தேதி தாயகம் திரும்பியிருக்கிறார். இந்த சுற்றுப்பயணத்தினால் 41 நிறுவனங்களுடன் 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்பட்டிருப்பதும், இதன் மூலம் சுமார் 35,520 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதும் நல்ல முயற்சியாகும். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமாகா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


Tags : GK Vasan , GK vasan, CM
× RELATED வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்து: ஜி.கே.வாசன்