×

நீர்பாசன திட்டங்களை தெரிந்து கொள்ள இஸ்ரேல் நாட்டிற்கு விரைவில் சுற்றுப்பயணம்: முதல்வர் எடப்பாடி பேட்டி

சென்னை: அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளை தொடர்ந்து நீர்பாசன முறைகளை தெரிந்து கொள்ள விரைவில் இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு இரண்டு வாரம் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: உங்கள் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்ததா? தொழில் முதலீட்டாளர்கள், நம்முடைய தமிழகத்தில் புதிய தொழில் துவங்க, எதிர்பார்த்ததைவிட ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த வெளிநாட்டு பயணத்தின்போது, கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் எப்பொழுது நடைமுறைக்கு வரும்?குறுகிய காலத்திலே நடைமுறைக்கு வர இருக்கின்றன.

வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அங்கு வாழக்கூடிய மக்கள் எந்த அளவிற்கு உங்களை வரவேற்றார்கள்? பதில்: அனைவரும் எங்களை ஆர்வத்துடன் வரவேற்றார்கள். ஏறக்குறைய இரண்டாயிரம் மைலுக்கு அப்பாலிருந்து வந்துகூட நியூயார்க்கில் வரவேற்றார்கள். அமெரிக்காவில் ஏறக்குறைய 35 சதவீதம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் ஐடி துறையில் இருக்கிறார்கள்.உங்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் பிற நாடுகளுக்கும் தொடருமா?நிச்சயமாக தொடரும். அடுத்தது இஸ்ரேல் செல்லவிருக்கிறோம். தமிழகத்தில் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தக்கூடிய தண்ணீரை இஸ்ரேலில் 7 ஏக்கருக்கு பயன்படுத்தும் நவீன வசதியை புகுத்தியிருக்கிறார்கள். அந்தளவிற்கு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் நாடு இஸ்ரேல். அதுமட்டுமல்லாமல், கழிவுநீரை மறுசுழற்சி செய்து விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள். நம் மாநிலத்தில் பருவமழை பொய்த்து விவசாயிகள் பாதிக்கப்படுவதால், நீரை சிக்கனமாக பயன்படுத்துதலை அறிந்து வருவதற்கு இஸ்ரேல் நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறோம்.

கோட்-சூட் அணிந்தது ஏன்?
கோட்-சூட் அணிந்து இந்தியா திரும்புவீர்கள் என்று  எதிர்பார்த்தோம், நீங்கள் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன்  வந்திருக்கிறீர்களே? வெளிநாட்டிற்கு நாம் தொழில் முதலீடுகளை  ஈர்ப்பதற்காக சென்றிருக்கிறோம். அயல் நாட்டை சேர்ந்த தொழிலதிபர்கள்  சந்திக்கும்பொழுது, அவர்கள் உடையில் இருந்தால்தானே அதற்கு ஒரு மரியாதை  இருக்கும் என்று முதல்வர் எடப்பாடி கூறினார்.

Tags : Israel ,CM Edappadi , Irrigation Projects, Israel, CM Edapadi
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...