×

சீன ‘பிளாஸ்டிக்’ பூக்கள் வரத்தால் ஓசூர் கொய்மலர் விற்பனை சரிந்தது

ஓசூர்: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் பூக்களின் வரத்து அதிகரிப்பால், ஓசூரில் உற்பத்தி செய்யப்படும் கொய்மலர்கள் விற்பனை சரிந்துள்ளது. ரோஜா உற்பத்தியில் ஓசூர் முக்கிய பங்காற்றி வருகிறது. ஓசூர் நகரில் குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவுவதால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், மூவாயிரத்துக்கும் அதிகமான பசுமைக்குடில் மூலம் ரோஜா, கிரைஸாந்திமம், ெஜர்பரா, கார்னேஷன், டியூப் ரோஸ் உட்பட 30 வகையான கொய் மலர்களை சாகுபடி  செய்துள்ளனர். ஓசூரில் உற்பத்தி செய்யப்படும் ரோஜா பூக்கள், இந்தியா தவிர வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் பூக்கள், அலங்காரப் பொருட்களாக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.  

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கொய் மலர்களை வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறோம். இத்தொழிலில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், தற்போது மார்க்கெட்டில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதால், ரோஜா விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தது போல், பிளாஸ்டிக் பூக்களையும் தடை செய்ய வேண்டும்,’ என்றனர்.


Tags : Hosur Koilar ,Chinese , Chinese, Plastic Flowers, Hosur, Koilar
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...