×

குறைதீர் கூட்டம்

சென்னை: தாம்பரம்  கோட்டத்தில் நாளை   மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது, என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிடப்பட்ட அறிக்கை:  தாம்பரம் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (12ம் ேததி) காலை 10.30 மணிக்கு தாம்பரம் செயற்பொறியாளர் அலுவலகம், 110 கி.வோ, புதுதாங்கல் துணைமின் நிலைய வளாகம், 1வது தளம், முல்லை நகர், மேற்கு தாம்பரம், சென்னை-45. என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு மின்வாரிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : Grievance meeting , குறைதீர் கூட்டம்
× RELATED மக்கள் குறைதீர் கூட்டம் ஜூன் 8 வரை ரத்து