×

சிலிண்டர் வெடித்ததில் 2 குடிசைகள் சாம்பல்

அண்ணாநகர்: நொளம்பூர் பகுதியில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் 2 குடிசைகள் எரிந்து சாம்பலானது. மதுரவாயல் அடுத்த நொளம்பூர் பாடசாலை தெருவை சேர்ந்தவர் கங்காதரன். இவர், நேற்று தனது குடிசை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியில் சென்றிருந்தார். இந்நிலையில், வீட்டின் சமையல் அறையில் இருந்த காஸ் சிலிண்டர் மதியம் திடீரென வெடித்துச் சிதறி தீப்பிடித்தது. இதை பார்த்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனா ல், முடியவில்லை.

காற்றில் தீ வேகமாக பரவி அருகில் இருந்த டேவிட் என்பவரது வீடும் எரிந்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அனைத்தனர்.  ஆனால், அதற்குள் 2 வீடுகளும் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் வீட்டிலிருந்த டிவி, மின்விசிறி, பிரிட்ஜ், துணிகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. கங்காதரன் வீட்டின் பீரோவில் வைத்திருந்த ₹50 ஆயிரம், தங்க நகையும் தீயில் கருகின. தீ விபத்தின்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து நொளம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : 2 huts gray , cylinder blast
× RELATED சென்னை குடிசை பகுதிகளில் உள்ள 26 லட்சம்...