மூளை காய்ச்சலில் பாதித்த தந்தை கட்டணம் செலுத்தாததால் கல்லூரியில் இருந்து மகள் நீக்கம்: கல்விக்கடன் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு

மதுரை: கல்லூரி கட்டணம் செலுத்தாததால் நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட துப்புரவு தொழிலாளியின் மகள், தனது படிப்பை தொடர கல்வி கடன் கேட்டு ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மதுரை, ஒத்தக்கடையைச் சேர்ந்தவர் ரவி. மதுரை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக உள்ளார். மூளைக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டு, கடந்த ஓராண்டிற்கும் மேலாக மருத்துவ விடுப்பில் சிகிச்சையில் உள்ளார். இவரது மகள் காயத்ரி. கடந்த 2017ல்  பிளஸ் 2 தேர்வில் 977 மதிப்பெண் பெற்றார். பொள்ளாச்சியில் உள்ள நிறுவனத்தில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் பிஎஸ்சி(விமான பராமரிப்பு மற்றும் ெபாறியியல்) பிரிவில் சேர்ந்தார். எஸ்சி-எஸ்டி பிரிவின் கீழ் இவருக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை.

இதனால், ஒத்தக்கடை அரசுடமை வங்கியில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், ரவியின் சிபில் புள்ளி குறைவாக இருப்பதாக கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து கல்வி கட்டணம் செலுத்தாததால் காயத்ரி நீக்கப்பட்டார். இதையடுத்து தனக்கு கல்விக்கடன் வழங்க வங்கிக்கு உத்தரவிடக் கோரி காயத்ரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், விசாரணையை தள்ளி வைத்தார்.Tags : Brain fever, father fees, college, daughter elimination, academic debt, iCort Branch
× RELATED மயிலாடுதுறை நகராட்சிக்கு பொதுமக்கள்...