×

சில்லி பாயின்ட்...

* ‘கேப்டன் விராத் கோஹ்லி - ரோகித் ஷர்மா இடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், அதை மோதலாக எடுத்துக்கொள்ள கூடாது. ஒரு அணியில் 15 வீரர்கள் இருக்கும்போது பல்வேறு விதமான கருத்துகள் இருப்பது வாடிக்கை தான்’ என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
* பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் உள்ள ஒரு கேலரிக்கு கேப்டன் விராத் கோஹ்லி பெயர் சூட்டப்படுகிறது. நாளை நடைபெறும் இதற்கான விழாவில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
* ‘பீல்டிங்கின்போது கையில் அணிந்திருக்கும் பட்டையை வைத்து பந்தை சேதப்படுத்த உபயோகிப்பேன்’ என்று ஆஸி. வீரர் டேவிட் வார்னர் ஒருமுறை தன்னிடம் கூறியதாக இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக் தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
* ஒவ்வொரு போட்டிக்கும் புதிது புதிதாக வியூகங்களை அமைக்க வேண்டிய கட்டாயம் தனக்கு ஏற்பட்டுள்ளதாக நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கூறியுள்ளார்.
* தோஹாவில் நடைபெற உள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் (செப். 27 - அக். 6) பதக்கம் வெல்ல முடியும் என்று இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான நேர்முக வர்ணனை அளிப்பது தொடர்பாக அகில இந்திய வானொலி - பிசிசிஐ இடையே 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவுடன் நடைபெற உள்ள டி20 தொடரில் இருந்தே இந்த ஒப்பந்தம் அமலுக்கு வருகிறது. ரஞ்சி, இரானி, தியோதர், முஷ்டாக் அலி தொடர்களுக்கும் இது பொருந்தும்.

Tags : All Sports
× RELATED ஐபிஎல்லில் இன்று மோதல்: டெல்லியை பழிதீர்க்குமா குஜராத் டைட்டன்ஸ் ?