டி20, ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் கேப்டனாக போலார்டு

ஜமைக்கா: ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டனாக ஆல் ரவுண்டர் கெய்ரன் போலார்டு நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக ஜேசன் ஹோல்டர் நீடிக்கும் நிலையில், ஒருநாள் போட்டிகளில் அவரது கேப்டன் பதவி போலார்டு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே போல டி20 போட்டிகளுக்கான கேப்டன் கார்லோஸ் பிராத்வெய்ட் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பை போட்டித் தொடர் நடக்க உள்ள நிலையில், போலார்டு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெருகிறது. அவருக்கு நட்சத்திர வீரர்கள் டுவைன் பிராவோ, சாமுவேல் பத்ரீ உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், போலார்டு தலைமையில் மீண்டும் வெ.இண்டீஸ் அணிக்காக விளையாட விரும்புவதாகவும் தங்களீன் ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நவ.5ம் தேதி தனது முதல் சவாலை போலார்டு எதிர்கொள்கிறார்.

Related Stories:

>