முத்தரப்பு டி20 தொடர் வங்கதேச அணியில் மாற்றம்

தாக்கா: முத்தரப்பு டி20 தொடருக்கான வங்கதேச அணியில் அதிரடியாக 6 வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தான் அணியுடன் நடந்த டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்த தொடருக்கான வங்கதேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

மெகதி மிராஸ், அபு ஹைதர், ஆரிபுல் ஹக், முகமது மிதுன், நஜ்முல் இஸ்லாம், ருபெல் உசேன் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். தமிம் இக்பால் ஓய்வெடுத்து வருவதால் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இவர்களுக்கு பதிலாக ஆபிப் , மொசாடெக், சப்பிர், தைஜுல், மஹேதி ஹசன், அராபத் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. டி20 அணி: ஷாகிப் ஹசன் (கேப்டன்), லிட்டன் தாஸ், சர்க்கார், முஷ்பிகுர் ரகிம், ஆபிப், மொசாடெக், சப்பிர், தைஜுல், மஹேதி ஹசன், அராபத், சைபுதின், முஸ்டாபிசுர்.

Tags : Transition , T20 Series, Bangladesh squad
× RELATED இலங்கையை 2-0 என வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா