×

படுக்கையில் மறந்து போடப்பட்டிருந்தது சிறுமியின் முதுகில் குத்தியதையல் ஊசி அகற்றம்

புதுடெல்லி: வீட்டில் படுக்கையில் மறந்து போடப்பட்டிருந்த தையல் ஊசி, சிறுமியின் முதுகில் குத்தி உள்ளே சென்றது. 10 நாளாக வலியில் துடித்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அதை வெளியே எடுத்தனர்.  டெல்லியைச் சேர்ந்த 10 வயது சிறுமி படுக்கையில் படுத்தபோது ஏதோ சுருக்கென்று குத்தியுள்ளது. தொடர்ந்து முதுகு பகுதியில் கடுமையாக வலி இருந்து வந்துள்ளது. இதுகுறித்து அவர் பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்களாலும் எதனால் வலி வருகிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுமியால் வலி பொறுக்க முடியாத அளவுக்கு இருந்துள்ளது. இதையடுத்து நேரு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்று எக்ஸ்ரே எடுத்தனர். அப்போது அவரது முதுகு பகுதியில் தையல் ஊசி ஒன்று இருப்பதை கண்டறிந்தனர்.

சிறுமியின் தாயார் படுக்கையில் மறந்து போட்ட தையல் ஊசிதான், குழந்தையின் முதுகில் குத்தி உள்ளே சென்றுள்ளது. அது அவருக்கு வலியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, 10 நாளாக வலியில் துடித்துக் கொண்டிருந்த அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் ஊசியை வெளியே எடுக்க முடியவில்லை. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் மிக சாதுர்யமாக செயல்பட்டு ஊசியை அகற்றினர். சிறுமி இப்போது இயல்பு நிலைக்கு திரும்பி விட்டாள் என அறுவை சிகிச்சை செய்த டாக்டர் சர்மா கூறினார். குழந்தைகளின் பெற்றோர், வீட்டில் மிக கவனத்துடன்  இருப்பதுடன், ஊசி போன்ற கூர்மையான பொருட்களை படுக்கை, சாப்பிடும் இடத்தில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.




Tags : Bed, little girl, needle
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்