×

துணை ஜனாதிபதி திட்டவட்டம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பாக்.கிடம் பேசுவோம்

புதுடெல்லி: ‘‘பாகிஸ்தானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தால், அது ஆக்கிரமிப்பு காஷ்மீருக்காக மட்டுமே இருக்கும்,’’ என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் டெல்லியில் நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசினர். அப்போது அவர்களுக்கு வெங்கையா பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.  சமீபத்தில், ஜனாதிபதி ஆட்சியின் கீழ் நடந்த காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவானதற்கு மகிழ்ச்சி தெரிவித்த வெங்கையா, இனி ஒவ்வொரு 5 ஆண்டும் உள்ளாட்சி தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

சட்டப்பிரிவு 370 என்பது அரசியல்சாசனத்தின் தற்காலிக சலுகை என்றும், அது தற்போது நீக்கப்பட்டுள்ளதன் மூலம் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களும், சட்டங்களும் அமல்படுத்தப்படுவதால், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி அடையும் என்றும் கூறினார். இச்சட்டப்பிரிவு நீக்கப்படுவதற்கு முன்பும், பின்பும் காஷ்மீரில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். பாகிஸ்தான் குறித்து அவர் பேசுகையில், ‘‘பாகிஸ்தானுடன் இனிமேல் நடத்தப்படும் பேச்சுவார்த்தை என்பது, ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் ஒவ்வொரு இந்தியனுக்கும் முக்கியமான தேச ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கானதாக மட்டுமே இருக்கும்’’ என்றார்.



Tags : Vice President ,Kashmir , Vice President, Kashmir, Pakistan
× RELATED திருவண்ணாமலையில் பா.ஜ.க.வினர் ஒருவரை...