×

இந்தியாவில் அடைக்கலம் அளிக்க வேண்டும்: பாக். முன்னாள் எம்எல்ஏ கோரிக்கை

சண்டிகர்:  பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ குடும்பத்துடன் இந்தியாவில் தஞ்சமடைய அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெக்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பால்தேவ் குமார் (43). இவர் தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் கடந்த மாதம் இந்தியா வந்தார். தற்போது பஞ்சாப்பின் லூதியானா மாவட்டத்தில் தங்கி இருக்கிறார். இவர் இந்தியாவில் தனக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பால்தேவ் குமார் கூறுகையில், நாங்கள் அடைக்கலம் கேட்பதற்காக தான் இங்கு வந்தோம்.

பிரதமர் மோடி எங்களுக்கு உதவி வேண்டும் என நாங்கள் கேட்டுக்ெகாள்கிறோம். பாகிஸ்தானில் என்ன நடக்கிறது என மொத்த உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் வந்தபோது, பாகிஸ்தானின் விதியை மாற்றுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர்  அதில் தோல்வியடைந்து விட்டார். சிறுபான்மையினர் உரிமையை இழந்து விட்டனர். சிறுபான்மையினருக்கு பாகிஸ்தானில் உரிமைகள் இருந்தது. ஆனால், அதுபோன்ற சூழல் மீண்டும் வராது. சிந்த், நன்கான சாகிப் மாகாணத்தை சேர்ந்த ஏராளமான குடும்பங்களும் இந்தியாவில் தஞ்சமடைய விரும்புகின்றன, என்றார்.



Tags : India ,Pak ,MLA , India, Pakistan
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...