×

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் ஒரு இந்தியரை கூட புறக்கணிக்க மாட்டோம்: ஸ்மிருதி இரானி திட்டவட்டம்

கொல்கத்தா: தேசிய குடிமக்கள் பதிவேட்டில் எந்த ஒரு இந்தியரும் புறக்கணிக்கப்படமாட்டார் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசிய குடிமக்கள் பதிவேட்டை தனது மாநிலத்தில் அனுமதிக்க மாட்டேன் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார். மேலும் இது பாஜ அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்து இருந்தார். இந்நிலையில், மம்தாவுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்துள்ளார். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், “சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் சட்ட ரீதியாக கையாளப்படுவார்கள்.

எந்த ஒரு இந்தியரும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் புறக்கணிக்கப்படமாட்டார்கள். பாஜ தலைமையிலான அரசானது நாட்டின் குடிமக்களது உரிமையை பாதுகாப்பதற்காக உறுதியேற்று  அர்ப்பணிப்போடு முன்னேறி செல்கிறது. மத்திய அரசின் கொள்கைகளை முதல்வர் மம்தா எதிர்த்து வருவது மக்கள் அனைவருக்கும் தெரியும். மக்களவை தேர்தல் முடிவின் மூலம் மேற்கு வங்கத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது,” என்றார்.


Tags : Indian , National Citizens, Indians, Smriti Irani
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்