×

சென்னை அண்ணா சாலையில் 2 நாள் சோதனை ஓட்டம்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு 2 நாள் சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாசாலையில் மெட்ரோ ரயில் பணிகள் முடிந்ததால் ஜி.பி.ரோடு முதல் ஒயிட்ஸ்ரோடு வரை மீண்டும் இருவழி சாலையாக மாற்றப்பட உள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் அண்ணா சாலையில் இருவழி போக்குவரத்து சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து வாகனங்கள் வெலிங்டன் சந்திப்பு நோக்கி செல்ல அனுமதிக்கப்பட உள்ளது. வெலிங்டன் சந்திப்பில் இருந்து ராயப்பேட்டை மணிக்கூண்டு வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.ராயப்பேட்டை ஒயிட்ஸ்ரோடு மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.

Tags : test drive ,Chennai ,Anna Road , Mount Road
× RELATED அண்ணா சாலை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில்...