எம்.குண்ணத்தூர் கிராமத்தில் மழை வேண்டி பொங்கல் வைத்து வழிபாடு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே எம்.குண்ணத்தூர் கிராமத்தில் உள்ள பழமையான ஸ்ரீதானத்து அய்யனார் கோயிலில் எம்.குண்ணத்தூர் மற்றும் சுற்றியுள்ள 7 கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் பொங்கல் பானைகளை கோயிலில் படையல் வைத்து வழிபாடு செய்தனர்.

இதனை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதமாக பொங்கல் வழங்கப்பட்டது. மேலும் ஆடு, கோழி உள்ளிட்டவை பலியிட்டு பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர், ஆன்மீக இளைஞர்கள் செய்து இருந்தனர்.

Tags : Pongal ,village , M Kunnathoor village, rain, worship
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி களைகட்டும் வாரசந்தைகள்