×

நாட்டு மக்களுக்கு சேவையாற்ற தன்னையே அர்ப்பணித்தவர் அருண் ஜேட்லி: பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி: நாட்டு மக்களுக்கு சேவையாற்ற தன்னையே அர்ப்பணித்தவர் அருண் ஜேட்லி என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, முன்னாள்  மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி (66), சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 24-ம் தேதி காலமானார். ஜெட்லி மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா  நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்  சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள்  இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே அருண் ஜெட்லிக்கு பீகாரில் சிலை அமைக்கப்படும் என அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அருண் ஜெட்லி ஒரு திறமையான மனிதர். அவர் அரசாங்கத்தின் அமைச்சக பொறுப்புகளை திறமையாகவும், சாதுர்யமாகவும் கையாண்டவர். மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பீகார் மாநிலத்தில் சிலை அமைக்கப்படும். மேலும் ஆண்டுதோறும் அருண் ஜெட்லியின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பலர் கலந்துகொண்டனர். பிரார்த்தனை நிகழ்ச்சியில் பஜனைப்பாடல்கள் பாடப்பட்டன. பின்னர் அருண் ஜேட்லி படத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய அவர்;  நாட்டு மக்களுக்கு சேவையாற்ற தன்னையே அர்ப்பணித்தவர் அருண் ஜேட்லி என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். கடைசி முறையாக அருண் ஜெட்லி முகத்தை பார்க்க தவறிவிட்டேன். ஜேட்லியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாதது வருத்தம் அளிக்கிறது. மறைந்த அருண் ஜேட்லி எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

Tags : Arun Jaitley ,Modi ,nation , People, Service, Arun Jaitley, PM Modi, Praise
× RELATED மகளிர் பிரிமியர் லீக் டி20 ஆர்சிபி அணி...