×

ஒவ்வொரு 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை; பெண்களை விட ஆண்கள்தான் அதிக அளவில் தற்கொலை : உலக சுகாதார அமைப்பு அறிக்கை

நியூயார்க் : உலக அளவில் ஒவ்வொரு 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. உலக அளவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினமாக (World Suicide Prevention Day) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்கொலைகள் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. இவர்களில் தூக்கு போட்டும், துப்பாக்கியால் சுட்டும், வி‌ஷம் குடித்தும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இத்தகைய முறை கிராமப்புறங்களில் கடைபிடிக்கப்படுகிறது.போர், கொலை, மார்பக புற்றுநோய் ஆகியவற்றிற்கு பறிபோகும் உயிர்களை விட தற்கொலைகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தற்கொலையும் குடும்பம், நட்பு மற்றும் சக ஊழியர்களை பாதிக்கச் செய்வதாக உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ் அதானம் கெப்ரிய சிஸ் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான தற்கொலைகள் குறைந்த, மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் நிகழ்கின்றன. இலங்கை, லுமுவேனியா, லெசோதோ, உகாண்டா, தென்கொரியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் அதிக தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. இங்கு 1 லட்சம் பேருக்கு 13.7 சதவீதம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். பொதுவாக அனைத்து நாடுகளிலும் பெண்களை விட ஆண்கள்தான் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதே நேரத்தில் வங்காளதேசம், சீனா, லெகோதோ, மொராக்கோ மற்றும் மியான்மரில் தற்கொலை செய்பவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகம் ஆவர். இவர்களில் இளம் வயதினர் அதிக அளவில் உள்ளனர். மொத்தத்தில் தற்கொலை செய்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 45 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்த படியாக தற்கொலை செய்பவர்கள் பட்டியலில் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். இவை தவிர சாலை விபத்துகளிலும் அதிக அளவில் மரணம் நிகழ்கிறது.

Tags : Men ,women ,World Health Organization , World Health Organization, Reporting, Suicide, Men
× RELATED மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் ஆண்களைவிட அதிகமாக வாக்களித்த பெண்கள்