×

காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை இந்திய அரசு காலில் போட்டு மிதிப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பாகிஸ்தான் குற்றச்சாட்டு

ஜெனீவா : ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது கூட்டம், ஜெனீவா நகரில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் மனித உரிமை மீறல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.இக்கூட்டத்தில் தொடக்க உரை நிகழ்த்திய ஆணையத் தலைவர் மிச்சல் பாச்லெட், ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி எழுப்பினார். ஜம்மு காஷ்மீர் நிலவரம் தொடர்பான 115 அறிக்கையை குரேஷி தாக்கல் செய்தார். அதில் காஷ்மீர் குறித்து ராகுல் காந்தி மற்றும் உமர் அப்துல்லா முன்வைத்த விமர்சனங்கள் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றிருந்தது . பின்னர் ஷா மெகமூத் குரேஷி தமது உரையில், காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய குரேஷி, ஜம்மு காஷ்மீரில் பெரும்பான்மை முஸ்லிம்களை வலுக்கட்டாயமான நடவடிக்கைகளால் சிறுபான்மையினராக்குகிறது இந்தியா என்றும் காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது என்றும் சுட்டிக் காட்டினார். மேலும் குரேஷி உரை நிகழ்த்தியது பின்வருமாறு, ஜம்மு காஷ்மீரானது ருவாண்டாவைப் போல மாற்றப்பட்டு வருகிறது.

காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பயங்கரவாதத்தின் பெயரால் சர்வதேச நாடுகளை திசைதிருப்புகிறது இந்தியா. காஷ்மீர் நிலவரத்தை பன்னாட்டு அமைப்புகள் பார்வையிடுவதற்கு இந்தியா ஒப்புக் கொண்டால் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சர்வதேச அமைப்புகள் ஆய்வு நடத்த நாங்களும் ஒப்புக் கொள்கிறோம். ஜம்மு காஷ்மீர் மாநிலமே சிறைகூடமாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு ஷா மெகமூத் குரேஷி பேசினார்.


Tags : United Nations ,Pakistan ,meeting ,Human Rights Commission , UN Human Rights, Geneva, Rwanda, Shah Meghmood Qureshi, Kashmir, Pakistan, Indictment
× RELATED உலக புத்தக தினத்தையொட்டி பெரம்பலூர் நூலகத்தில் புத்தகம் வாசிப்பு