×

காங்கிரஸ் கட்சியில் இருந்து பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் விலகுவதாக அறிவிப்பு

டெல்லி: மக்களவை தேர்தலில் மும்பை வடக்கு பகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான ஊர்மிளா மடோன்கர் தமிழில், கமல்ஹாசன் நடித்த ’சாணக்கியன்’, ’இந்தியன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ஊர்மிளா 1980களில் புகழ்பெற்ற முன்னணி நடிகையாக திகழ்ந்தார். டெல்லியில் சமீபமத்தில் பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தியை கடந்த மார்ச் 27ம் தேதி சந்தித்து அவர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

அவருக்கு ராகுல் காந்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த  அவருக்கு மகாராஷ்டிரா மாநிலம் வடக்கு மும்பை தொகுதி ஒதுக்கப்பட்டது. அவரை எதிர்த்து, பாஜ கட்சின் சிட்டிங் எம்பியான கோபால் ஷெட்டி மீண்டும் போட்டியிட்டார். இந்நிலையில் தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். இந்நிலையில் இன்று பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; மும்பையில் தனிப்பட்ட ஆதாயத்திற்காக செயல்படும் கட்சி நிர்வாகிகள் மீது புகார் அளித்தும், மேலிடம் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Urmila Madonkar ,Congress , Congress, Urmila Madonkar, Dissolution
× RELATED காங்கிரஸ் கட்சிக்கும், சீன...