×

உதகையில் குப்பை மறுசுழற்சி மையத்தை அகற்ற கோரி 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

நீலகிரி: உதகை காந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் குப்பை மறுசுயற்சி மையத்தை அகற்றக்கோரி சுமார் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உதகை நகரில் நாள்தோறும் சேகரிக்கப்படும் டன் கணக்கான குப்பை கழிவுகள் காந்தல் முக்கோண பகுதியில் செயல்பட்டு வரும் குப்பை மறுசுழற்சி மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு உரமாக மாற்றப்படுகிறது. அண்மை காலமாக இங்கு கொட்டப்படும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறால் அவதிபடுவதாக கூறி 100க்கும் மேற்பட்டார் இன்று குப்பை மறுசுழற்சி மையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அங்கு வந்த உதவி நகராட்சி அதிகாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள் மறுசுழற்சி மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்ததாவது, இந்த மையத்திற்கு கொண்டுவரும் குப்பையானது தெருவில் கொட்டப்படுவதால் அவை கழிவுநீர் செல்லும் வடிகால் பாதையில் சென்று அடைபடுவதாகவும் இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் இந்த குப்பைகளால் குழந்தைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


Tags : road ,Uganda , Uganda, garbage recycling center, public, road pickers
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை