×

இந்தியா - நேபாளம் இடையே குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டம் தொடக்கி வைப்பு : 69 கி.மீ.தூரத்திற்கு 15 மாதங்களில் குழாய்கள் அமைத்தது இந்தியா

காத்மண்டு : இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டம் தொடங்கியது.  ரூ.324 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ள எண்ணெய் குழாய்த் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியும் நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஆகியோர் தொடக்கி வைத்தனர். டெல்லியில் இருந்தவாறு காணொலிக் காட்சி மூலம் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பீகாரின் மோத்திஹரியில் இருந்து நேபாளத்தில் உள்ள  அம்லேக்கஞ்ச் நகருக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பப்பட உள்ளது.

இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டம்


இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்ளை சுலபமாக விநியோகிக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே எண்ணெய் குழாய் பாதை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா இந்தியா வந்த போது, பிரதமர் மோடியுடன் இணைந்து இதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். பீகார் மாநிலம் மோதிஹாரியிலிலிருந்து, நேபாளத்தின் அம்லேக்கஞ்ச் பகுதி வரை 68.9 கி.மீ தூரத்திற்கு எரிபொருள் கொண்டு செல்லும் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் ஆகஸ்ட் மாதம் முடிவடைந்து விடும் என இத்திட்ட இயக்குநர் பிரதீப்குமார் ஏற்கனவே தகவல் தெரிவித்து இருந்தார்.

பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்


இந்நிலையில், திட்டம் முடிவடைந்ததை அடுத்து தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டத்தை டெல்லியில் இருந்து பிரதமர் மோடியும் நேபாளத்தில் இருந்து பிரதமர் கே.பி.ஷர்மாவும் இணைந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தெற்கு ஆசியாவில் குழாய் மூலம் இரு நாடுகளுக்கு இடையே எரிபொருள் கொண்டு செல்லப்படுவது இதுவே முதல்முனை என்றார். மேலும் நேபாள அரசின் முழு ஒத்துழைப்பால் இது சாத்தியமானது என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், எரிபொருட்களை கொண்டு செல்லும் செலவு குறையும் என்பதால் நேபாளத்தில் அவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குழாய்கள் மூலம் மணிக்கு, 2 லட்சம் லிட்டர் எரிபொருள் இடம்பெயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : India , PM Modi, KP Sharma, Petrol, Nepal, Pipeline
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!