பாளையங்கோட்டை: அகில இந்திய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தரவரிசை பட்டியலில் பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. தேசிய அளவில் சிறந்த கலை, அறிவியல் கல்லூரியாக பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தரவரிசையில் புனித சேவியர் கலை, அறிவியல் கல்லூரி முதலிடம் பெற்றுள்ளதாக பல்கலைக்கழக தேசிய தர மதிப்பீட்டுக் குழு அறிவித்துள்ளது.