×

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு: மத்திய அரசு அறிவிப்பு

விருதுநகர்: 80 ஆண்டுகளுக்கு மேலாக சுவையால் சுண்டி இழுக்கக்கூடிய ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தஞ்சாவூர் வீணை, காஞ்சிபுரம் பட்டு உள்ளிட்ட பாம்பரிய பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியிருக்கிறது. அந்த வரிசையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ருசியாகவும், திகட்டாமலும் இருக்கும். 1940ம் ஆண்டு முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பாரம்பரியமாக தயாரிக்கப்பட்டு வந்த பால்கோவாவானது ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியின் குடிசை தொழிலாக மாறியுள்ளது.

ஆரம்பத்தில் பால்கோவா மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பால் ஹல்வா, பால் தேடா, பால் கேக், கேரட் பால்கோவா மற்றும் பியூர் கோவா என பலவகையில் தயாரிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதால் இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. சுமார் 80 ஆண்டுகளாக இப்பகுதியில் தனித்துவத்துடன் தயாரிக்கப்படும் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு எதுவும் இல்லாதததால் புவிசார் குறியீடு விரைவில் அளிக்கப்படும் என புவிசார் குறியீடு துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் தயாரிக்கக்கூடிய 31 பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில், 32வது பொருளாக ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்ற வார்த்தையை வேறு பகுதிகளை சேர்ந்த யாரும் கூறி விற்பனை செய்ய முடியாது என்பதுடன் சர்வதேச அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விற்பனை விரிவடைந்து தனி அங்கீகாரம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

Tags : Srivilliputhur Balkova ,Central Government Announcement , Srivilliputhur, Palkova, geo-code, soon, recognition
× RELATED மத்திய அரசு அறிவிப்பு: ஜூலை 18ல் ஜேஇஇ 26ல்...