×

சென்னை திரும்பினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி; அமைச்சர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு; புறக்கணித்த துணை முதல்வர்

சென்னை: 13 நாட்கள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பியுள்ளார். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பபழனிசாமி அதிகாலை சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், துரைகண்ணு ஜெயகுமார், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிங்ஸ் மருத்துவமனையின் கிளை தமிழகத்தில் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மலேரியா, டெங்கு போன்றவற்றை கட்டுப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நியூயார்க்கில் யாதும் ஊரே திட்டத்தை தொடங்கி வைத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ். புறக்கணிப்பு

வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மூத்த அமைச்சர்கள் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்ற நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திரும்பிய முதலமைச்சரை வரவேற்க அமைச்சர் திரண்டு வரவேற்றனர். ஆனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரை வரவேற்க செல்லவில்லை. இது அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Edappadi Palanisamy ,Ministers ,Volunteers ,Chennai , Chief Minister Edappadi Palanisamy, Foreign Tour, Chennai, AIADMK Volunteers, Ministers, O. Pannirselvam
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்