×

ரயில்வே போட்டி தேர்வை தமிழில் நடத்தலாம்: ரயில்வே வாரியம் உத்தரவு

சென்னை: ரயில்வே துறை சார்ந்த போட்டி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தலாம் என அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.  ரயில்வே துறை சார்ந்த போட்டி தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்த வேண்டும் என ரயில்வே வாரியம், ரயில்வே மண்டல மேலாளர்களுக்கு கடந்த மாதம் 21ம் தேதி அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. இந்த அறிவிப்பை திரும்ப பெறக்கோரி, தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் திமுக எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கடந்த 7ம் தேதி கடிதம் அளித்தனர். இந்நிலையில் அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளர்களுக்கு, ரயில்வே வாரியம் நேற்று ஒரு கடிதம் அனுப்பியது.

அதில், ‘‘ரயில்வே துறை போட்டித் தேர்வுகளை ஆங்கிலம் மறறும் இந்தியில் மட்டுமே நடத்த வேண்டும் என ரயில்வே வாரியம் அனுப்பிய அறிவுறுத்தல்கள் தொடர்பாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அந்த கடிதம் ரயில்வே போட்டி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த தடைவிதிக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம் ரயில்வே  தேர்வை தமிழில் நடத்தலாம்.Tags : Railway Board , Railway Competition Examination, Tamil and Railway Board
× RELATED ஜூன் 1-ம் தேதி முதல் தமிழகத்துக்குள்...