×

விரும்பும் உத்தரவுகளை பெற நீதிமன்றம் வணிக வளாகம் இல்லை: மனுதாரருக்கு ஐகோர்ட் கண்டிப்பு

சென்னை: பெண்கள் கையாளும் வகையில் தண்ணீர் கேன்களை வடிவமைக்கும் வகையில் விதிமுறைகளை வகுக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் மனுதாரர்கள் நினைக்கும் உத்தரவுகளைப் பெற நீதிமன்றம் வணிக வளாகம் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தீபா ஸ்ரீ என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:   சென்னையில் தண்ணீர் பிடிப்பதற்காக 20 லிட்டர் கேன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த தண்ணீர் கேன்களை கையாள்வது கடினமாக உள்ளது. குறிப்பாக பெண்கள் இந்த 20 லிட்டர் தண்ணீர் கேன்களை கையாள்வது மிக கடினம்.

தற்போது பயன்படுத்தப்படும் தண்ணீர் கேன்களை சுகாதாரமான முறையில் பராமரிப்பதில்லை. இதனால் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே, 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேனின் வடிவத்தை மாற்றி அமைக்கும் வகையில் விதிகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.  இந்த வழக்கு  நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ மனுதாரர்கள் நினைக்கும் உத்தரவுகளை பெற நீதிமன்றம் வணிக வளாகம் அல்ல.   மனுதாரர்களின் இது போன்ற கோரிக்கைகளை அரசிடம் கொண்டு போய் சேர்க்க நீதிமன்றம் தபால் நிலையமும் அல்ல. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.

Tags : petitioner , Women, Court Business Complex, Icord
× RELATED வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே...