×

பிரதமர் மோடி அறிவித்தது சாதனை பட்டியல் அல்ல வேதனை பட்டியல்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்தியில் பாஜ ஆட்சி மீண்டும் 2019ல் அமைந்து நூறு நாட்களை கடந்த நிலையில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் அடைந்திருக்கிறார். மோடி ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார சரிவு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டது வேலைவாய்ப்புகள்தான். மத்திய அரசு தனது ஒட்டுமொத்த செலவு மொத்த ஜி.டி.பி.யில் 14 சதவீதமாக இருந்ததை 12 சதவீதமாக குறைத்துள்ளது. மோடி அறிவித்திருப்பதோ சாதனைகளின் பட்டியல். ஆனால், நாட்டு மக்கள் அனுபவிப்பதோ வேதனைகளின் பட்டியல். தோல்வியை மூடி மறைப்பதற்கு எத்தகைய கோயபல்ஸ் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அதில் பாஜவினர் வெற்றி பெற முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : PM Modi, KS Alagiri
× RELATED மதரீதியாக வாக்கு சேகரித்த புகாரில்...