×

பொருளாதார மந்தநிலையில் 100ம் நாள் கொண்டாட்டமா? : இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி

புதுடெல்லி: ‘‘நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில், பாஜ அரசு 100 நாள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது ஆச்சர்யம் அளிக்கிறது’’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மத்தியில் 2வது முறையாக பதவியேற்று, 100 நாள் ஆட்சியை நிறைவு செய்துள்ளது. இதை பாஜ தலைவர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், ‘‘நாட்டின் பொருளாதாரம் வலுவான அடித்தளத்தை கொண்டுள்ளது. எனவே பீதி அடைய வேண்டியதில்லை’’ என்றார்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ‘‘காஷ்மீர் மக்கள் முன்னெப்போதும் இல்லாத பிரச்னையை சந்திக்கும் வேளையில் வெற்றியை பற்றி எப்படி அரசு பேச முடியும்? வேலையில்லா திண்டாட்டம், சகிப்பின்மை அதிகரிப்பு, ஜனநாயக உரிமை மறுப்பு, ஆர்எஸ்எஸ்சின் பிரித்தாளும் கொள்கை, பொருளாதார மந்தநிலை ஆகியவையே பாஜ அரசின் 100 நாள் சாதனைகளாகும். பொருளாதார மந்தநிலையால் சாமானிய மக்களும் கடும் சிரமத்தை சந்திக்கும் நேரத்தில் அரசால் 100 நாள் ஆட்சியை கொண்டாட முடிவது ஆச்சர்யமளிக்கிறது’’ என கூறப்பட்டுள்ளது.

Tags : celebration ,recession ,India , 100th celebration , economic recession,Communist Question of India
× RELATED முஸ்லிம் நாடுகளில் ஊரடங்கால் களையிழந்த ரம்ஜான் கொண்டாட்டம்