×

ராஜஸ்தான் ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா பதவியேற்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ஆளுநராக இருந்த கல்யான் சிங்கின் 5 ஆண்டு பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து  இமாச்சலப் பிரதேச ஆளுநராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா(78) ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.  கல்ராஜ் மிஸ்ரா நேற்று ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி பாதி ரவீந்திரபாத் புதிய ஆளுநருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட், அமைச்சர்கள், அதிகாரிகள் எதிர்க்கட்சி தலைவர் குலாம் சந்த் கட்டாரியா உள்ளிட்டோர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags : Kalraj Mishra ,Governor ,Rajasthan , Kalraj Mishra sworn, Governor of Rajasthan
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...