×

ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 100 படுக்கை வசதியுடன் காய்ச்சல் வார்டு: டீன் தகவல்

சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், காய்ச்சல் நோயாளிகளுக்கு 100 படுக்கை வசதியுடன் கூடிய வார்டு துவங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் ஜெயந்தி கூறினார்.சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய காரணிகள், அதை தடுப்பது குறித்து,  பொதுமக்களுக்கு, மருத்துவ மாணவர்கள் துண்டு பிரசுரம் மற்றும் செய்முறை விளக்கத்துடன் செய்து காட்டினர்.இதை தொடர்ந்து மருத்துவமனை டீன் ஜெயந்தி கூறியதாவது: டெங்கு காய்ச்சல் மற்றும் பருவமழை காலங்களில் ஏற்படக்கூடிய காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம்.

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 24 மணி நேர காய்ச்சல் வார்டு  துவங்கப்பட்டுள்ளது. காய்ச்சல்  நோயாளிகளுக்கு 100 படுக்கை வசதி கொண்ட இரண்டு வார்டுகள் உள்ளன. மேலும், டெங்கு பரிசோதனை மற்றும் தட்டணுக்கள் அளவு குறித்து, ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக, முடிவுகள் வழங்கப்படுகிறது. மருத்துவமனையில் நிலவேம்பு  குடிநீர் மற்றும் காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Ward ,Rajiv Gandhi Government General Hospital 100 , Rajiv Gandhi ,Government, General Hospital, information
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி