×

ஆந்திராவில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட 46 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் வியாபாரி உள்பட 4 பேர் கைது

சென்னை: ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 46 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வழியாக தேனி, திருச்சி மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்ெபக்டர் ஜெயந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி ேநற்று  முன்தினம் இரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த ரயிலில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பெண்கள் உட்பட 4 பேர் மூட்டைகளுடன் இறங்கினர். பின்னர் மூட்டைகளுடன் 4 பேரும் வழக்கமாக செல்லும் வழியை தவிர்த்து வடக்கு புறமாக பேருந்து  நிறுத்தத்திற்கு சென்றனர். இதை பார்த்த தனிப்படை போலீசார், பேருந்து நிறுத்தத்திற்கு விரைந்தனர்.

போலீசார் வருவதை பார்த்த 4 பேரும், ஆட்டோ மூலம் கோயம்பேடு நோக்கி புறப்பட்டனர். உடனே போலீசார் அதிரடியாக ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் இருந்த மூட்டைகளில் 26 பொட்டலங்கள் கொண்ட 46  கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.உடனே தனிப்படை போலீசார் 3 ெபண்கள் உட்பட 4 பேரையும் பிடித்து எழும்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து ெசன்று விசாரணை நடத்தினர். அதில், தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி கணேசன் (42), திருச்சி  தில்லை நகரை சேர்ந்த கஞ்சா வியாபாரி பாதிமா சலீம் (66), தேனி மாவட்டம் ஜெயமங்கலம் பெரியகுலம் பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரி (35), தேனி மாவட்டம் பொன்னையா தேவர் லேன் பகுதியை சேர்ந்த சசிகலா (38) என தெரியவந்தது.

கஞ்சா வியாபாரிகளான இவர்கள் 4 பேரும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் கஞ்சா மொத்தமாக கொள்முதல் செய்து ரயில் மூலம் சென்னைக்கு வருவதும், பின்னர் கோயம்பேடு வழியாக தேனி மற்றும்  திருச்சிக்கு பேருந்து மூலம் கொண்டு சென்று விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.இதையடுத்து 4 கஞ்சா வியாபாரிகளையும் எழும்பூர் போலீசாரிடம் ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஒப்படைத்தார். அதைதொடர்ந்து எழும்பூர் போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 46 கிலோ கஞ்சா பறிமுதல் ெசய்யப்பட்டது. பின்னர், கஞ்சா கடத்திய 4 பேர் மற்றும் 46 கிலோ கஞ்சாவை போதை தடுப்பு பிரிவினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


Tags : Andhra Pradesh , Andhra Pradesh, 46 kg ,cannabis, train
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி