×

விமானிகள் ஸ்டிரைக் எதிரொலி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து

லண்டன்: விமானிகளின் வேலை நிறுத்தம் காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் நேற்று ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் கடந்த 9 மாதங்களாக ஊதிய உயர்வுக் கோரி வருகின்றனர். பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் விமானிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. இதனைத் தொடர்ந்து 3 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக பிரிட்டிஷ் ஏர்லைன் விமானிகள் சங்கம் அறிவித்தது. நேற்று, இன்று மற்றும் வரும் 27ம் தேதி ஆகிய 3 நாட்களில் கோரிக்கையை வலியுறுத்தி விமானிகள்  அனைவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்திருந்தனர்.

இதன்படி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் நேற்று பணிக்கு செல்லாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். விமானிகள் பணிக்கு வராததால் பிரிட்டிஷ் ஏர்வேஸின் அனைத்து விமானங்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல மாதங்களாக சம்பள பிரச்னைக்கு தீர்வு காண முயன்றோம். எனினும் இதுபோன்ற நிலை ஏற்பட்டதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்’’ என்று கூறியுள்ளது.

Tags : Pilots ,flights ,strikes ,British Airways , Pilots ,Strike, British Airways
× RELATED சென்னையில் இருந்து புறப்பாடு, வருகை என 8 விமான சேவைகள் ரத்து