×

வாட்ஸ்-அப் மூலம் முத்தலாக் கேரளாவில் வாலிபர் மீது வழக்கு

திருவனந்தபுரம்: காசர்கோடு அருகே கணவர் வாட்ஸ்-அப் மூலம் முத்தலாக் தெரிவித்ததாக இளம்பெண் போலீசில் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மத்திய அரசு சமீபத்தில் முத்தலாக் தடைச் சட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி முதல் வழக்கு டெல்லியில் ஒரு வாலிபர் மீது பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே  முக்கம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், தனது கணவனுக்கு எதிராக முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்ய முக்கம் போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இது முத்தலாக் தடை சட்டத்தின்கீழ் கேரளாவில் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்காகும். இந்த நிலையில் ேகரளாவில் முத்தலாக் தடை  சட்டத்தின்கீழ் 2வதாக ஒரு புகார் செய்யப்பட்டுள்ளது. காசர்கோடு அருகே ஷிரிபாகிலு பகுதியை சேர்ந்த 29 வயதான இளம் பெண், காசர்கோடு டவுன் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.அதில் தனது கணவர் அஷ்ரப் (34) வாட்ஸ்-அப் மூலம் தனக்கு விவாகரத்து ெகாடுத்ததாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அஷ்ரப் மீது காசர்கோடு டவுன் போலீசார் முத்தலாக்  தடை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வாட்ஸ்-அப்பில் முத்தலாக் கூறியது தொடர்பாக, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தவும் தீர்மானித்துள்ளனர்.

Tags : plaintiff ,Muthalak Kerala ,Whats-Up , Case against ,plaintiff,Muthalak Kerala, Whats-Up
× RELATED திருமணமான 4 மாதங்களில் 2வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது