×

கரையிருப்பு பகுதியில் குவிந்துகிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம் -கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்

நெல்லை : நெல்லை சட்டமன்ற தொகுதி சீர் மரபினர் மக்கள் வேட்பாளர் முருகன், கலெக்டர் விஷ்ணுவிடம் அளித்துள்ள மனு: தச்சநல்லூர் அருகே நாரணம்மாள்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டு கரையிருப்பு தெற்குத் தெருவில் கடந்த ஒரு மாதமாக மேலாக துப்புரவு பணி நடக்கவில்லை. இதனால் குவிந்து கிடக்கும் குப்பைகள், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அத்துடன் ஒரு சில இடங்களில் கழிவுநீரோடை சுத்தம்் செய்யாததால் சாலையில் கழிவுநீர் தேங்கிநிற்பதால்  துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் தொடர்கிறது. இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் நேரடியாகவும், , போனிலும் தகவல் தெரிவித்தும்் எந்தவித பலனுமில்லை. மேலும் அரசு வித்துபண்ணை தெருவில் 15 நாட்களுக்கு முன்னர் பழுதடைந்த அடிபம்பும் இதுவரை சீரமைக்கப்படவே இல்லை. இதுகுறித்து தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்….

The post கரையிருப்பு பகுதியில் குவிந்துகிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம் -கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Murugan ,Seer Marabinar ,Vishnu ,Thachanallur ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...