பத்மனாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா தொடக்கம்

தக்கலை: குமரி மாவட்டத்தில் கேரள அரசின்  தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையில் இந்த ஆண்டு 3  நாள் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.  ஓணம் விழாவையொட்டி அரண்மனையில் அத்தப்பூ கோலம் போடப்பட்டிருந்தது. ஓணம் ஊஞ்சலில் சுற்றுலா பயணிகளும், ஊழியர்களும் ஓணம் பாட்டுக்களை பாடி ஊஞ்சலாடினர். தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் ஓணம் விருந்து நடைபெற்றது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரண்மனை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Tags : Onam Festival ,Padmanabhapuram Palace , Inauguration of Onam Festival ,Padmanabhapuram Palace
× RELATED தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா துவக்கம்