×

தேசிய அங்கீகாரம் தக்க வைக்க கூடுதல் வாய்ப்பளிக்க வேண்டும் : 3 முக்கிய கட்சிகள் கோரிக்கை

புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளன. ஒரு கட்சி தேசிய அங்கீகாரத்தை பெற, அதன் வேட்பாளர்கள் மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகள் பெற வேண்டும். மேலும், மக்களவையில் குறைந்தபட்சம் 4 எம்பிக்கள் இருக்க வேண்டும் என்பது தேர்தல் விதிமுறையாகும். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய கட்சிகளின் அங்கீகாரம் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், இதை 5 ஆண்டாக, 2016ல் தேர்தல் ஆணையம் விதிமுறையில் திருத்தம் செய்தது. அதன்படி, கடந்த ஆண்டு மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனியஸ்ட், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தேசியக் கட்சி அந்தஸ்துக்கான தகுதியை எட்டத் தவறின. இதனால், அக்கட்சிகளின் தேசிய அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது எனக் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு 3 கட்சிகளும் பதிலளித்தன.

இந்நிலையில், அம்மூன்று கட்சிகளும் தனிப்பட்ட முறையில் நேற்று தேர்தல் ஆணையத்தை அணுகி தங்களின் கோரிக்கையை வலியுறுத்தின. அப்போது அக்கட்சிகள், தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு தங்களின் தேசிய அங்கீகாரத்தை தக்க வைக்க கூடுதல் வாய்ப்பளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தன. காங்கிரசுக்கு பிறகு பழமையான கட்சி இந்திய கம்யூனிஸ்ட் என்பதால், சமீபத்திய தேர்தல் முடிவு அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்க கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தற்போது காங்கிரஸ், பாஜ, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் மேகாலயாவின் தேசிய மக்கள் கட்சி ஆகியவை மட்டுமே தேசியக் கட்சி அந்தஸ்துடன் உள்ளன. இதில், கடந்த மக்களவை தேர்தலில், பகுஜன் சமாஜ் 10 தொகுதிகளில் வென்றதால் தேசிய அந்தஸ்தை இழக்காமல் தப்பியது குறிப்பிடத்தக்கது.

Tags : parties , Additional opportunity,retain national recognition,Request by 3 major parties
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...