×

அண்ணாமலையார் கோயிலுக்கு ஓங்கோல் இன பசு வருகை

திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இக்கோயிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள்  வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் செல்கின்றனர். இங்கு கோசாலையில் மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இக்கோயிலுக்கு புதிய வரவாக ஓங்கோல் இன பசு ஒன்று வந்துள்ளது. இப்பசுவை பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் நேற்று தானமாக வழங்கினார். முன்னதாக கோயில் வளாகத்தில் பசுவிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் கோயில் நிர்வாகத்திடம் பசுவை ஒப்படைத்தனர். இந்த பசுவை கோயில் வளாகத்தில் உள்ள கோசாலையில் வைத்து பராமரிக்க உள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags : Ongole ,Annamalaiyar temple , Annamalayar, Ongole breed cow
× RELATED சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவு...