×

கர்நாடகாவில் தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது: பப்ஜி விளையாடியதை கண்டித்ததால் ஆத்திரம்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் பப்ஜி விளையாடுவதை கண்டித்த தந்தையை மகனே வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்டவர் பெலகாவி நகரை சேர்ந்த சங்கரப்பா என்பவர் ஆவார். இவரது மகன் ரகுவீர் கல்லூரிக்கு செல்லாமல் பெரும்பாலான நேரத்தை பப்ஜி விளையாடுவதிலேயே செலவழித்து வந்துள்ளான். இதற்காக தந்தைக்கும் மகனுக்கு, இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செல்போன் ரிசார்ச் செய்து பப்ஜி விளையாடுவதற்காக ரகுவீர் தனது தந்தையிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சங்கரப்பா பணம் கொடுக்க மறுத்துவிட்டதால் ஆத்திரமடைந்த ரகுவீர் அவரது தந்தையை வெட்டி கொலை செய்துள்ளான். தகவல் அறிந்து வந்த போலீசார் ரகுவீரை கைது செய்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பப்ஜி (Player Unknown’s Battle Grounds) விளையாட்டு? போர்க்களத்தில் சென்று எதிரிகளுடன் குழுவாக போரிடுவதும், போர்க்களத்தில் முகம் தெரியாத சிலருடன் அணியாக இணைந்து, எதிர்திசையில் உள்ளவர்களை தாக்கி அழிப்பதும் இந்த விளையாட்டின் விதி. பப்ஜி விளையாடும் சிறுவர்களுக்கு அதிநவீன துப்பாக்கிகளின் பெயர்கள் அத்தனையும் அத்துபடி. மறைந்திருக்கும் எதிரிகளை சுட்டு வீழ்த்தும்போது, சிறுவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறார்கள். கேமில் தோல்வி அடையும் போது சோர்வுறுகின்றனர். இதுபோன்ற விளையாட்டுகளின் விபரீத விளைவுகள் குறித்து உளவியல் நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கை மணி அடித்தும், சோகங்கள் தொடர்கின்றன.

இதயநோய் நிபுணர் விபுல் கார்க் கூறுகையில், “ சிறுவர்கள் இப்போது எல்லாம் மொபைல் போன்களில் இருக்கும் விளையாட்டுகளில் மனரீதியாக ஈர்க்கப்படுகிறார்கள். உச்சபட்ச உற்சாகம் மற்றும் திடீரென  சோர்வு நிலைக்கும் அவர்கள் தள்ளப்படுவதால் உணர்ச்சிமயமான வேகத்துக்கு ஆளாகிறார்கள். இதனால், இதயம் செயலிழக்கும் நிலைக்கு செல்கிறார்கள். இதுபோன்ற விளையாட்டுகளில் இருந்து குழந்தைகளை பெற்றோர்கள் விலக்கி வைக்க வேண்டும்,” என்றார்..

Tags : Karnataka , Karnataka, Arrested, Pubg
× RELATED சம்பளம் முழுவதையும் குடித்ததால் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது