×

ஆழியார் அணை நீர்மட்டம் உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையின் நீர்மட்டம்  105 அடியாக உயர்ந்துள்ளது.  பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் அணை  120 அடி கொள்ளளவு கொண்டது. கடந்த ஜூலை மாதம் வரை போதிய தண்ணீர் வரத்தின்றி நீர்மட்டம் குறைவானது. கடந்த மாதம் துவக்கத்திலிருந்து சில வாரமாக பெய்த தென்மேற்கு பருவமழையால், அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்தது. இந்த மாதம் துவக்கத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த கன மழையால் அணைக்கு மேலும், தண்ணீர் வரத்து அதிகரித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 100 அடியை எட்டியது.


தற்போது ஆழியார் சுற்றுவட்டாரத்தில் உள்ள நீர் தேக்கப்பகுதியிலிருந்து தண்ணீர் வரத்து அதிகரிப்பால் நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 105 அடியாக உயர்ந்தது. அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 1100 கன அடியாகவும் இருந்தது.  இன்னும் சில நாட்களில் முழு கொள்ளளவை  எட்டிவிட வாய்ப்புள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து மேலும், அதிகரித்தால் விரைவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பல மாதத்திற்கு பிறகு, ஆழியார் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Aliyar Dam Falls: Farmers' Pleasure , Farmers ,Farmers Happy, Pollachi,Aliyaru Dam
× RELATED பஸ், காய்கனி லாரிகள் ஒரே இடத்தில்...