×

தூய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா 160 ஆடுகளை வெட்டி அன்னதானம்

*காளையார்கோவில் அருகே கமகம

காளையார்கோவில் : காளையார்கோவில் அருகில் ஆண்டிச்சியூரணி விளக்கு ரோட்டில் உள்ள தூய ஆரோக்கிய அன்னை பிறப்பு பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நவநாள் திருப்பலி நடைபெற்றது.


கடைசி நாளான நேற்று காலை 8.30 மணிக்கு ஆண்டிசியூரணி பங்கு ஆலயத்தில் இருந்து ஆரோக்கிய மாதாவின் சப்பரபவனி புரப்பட்டு ஆண்டிச்சியூரணி விளக்குரோட்டில் உள்ள மாதா கெபிக்கு வந்தடைந்தது. தொடர்ந்து 9 மணியளவில் அருட்தந்தை பிரான்சிஸ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்களால் திருவிழா கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்திய 160க்கும் மேற்பட்ட ஆடுகள் பலிகொடுத்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாட்டை ஆண்டிச்சியூரணி பங்குத்தந்தை மற்றும் பங்கு இறை மக்கள் செய்திருந்தார்கள்.Tags : Pure Health Mother Temple Festival , goats, church, kalayarkovil,Church function
× RELATED கொரோனா ஊரடங்கால் குர்பானி ஆடுகள் விற்பனை மந்தம்