×

28 லட்சம் செலவில் மின்வாரிய ஊழியர்களுக்கு பிஎஸ்என்எல் சிம்கார்டு: 24,629 பேருக்கு வழங்க திட்டம்

சென்னை: ஊழியர்களுக்கு வழங்குவதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து, 24,629 சிம்கார்டு வாங்க மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழக மின்சார வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பிஎஸ்என்எல் சிம்கார்டு வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் தற்போது 24,629 சிம்கார்டுகள் வாங்க  திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ₹28,48,098 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வாங்கும் சிம்கார்டுகள் பல்வேறு அலுவலகங்களுக்கு பிரித்து வழங்கும்.

அதன்படி சென்னை தெற்கு-1,948; சென்னை வடக்கு-554; ஈரோடு-4,706; விழுப்புரம்-3,986; திருச்சி-4,670; வேலூர்-2,672; கோவை-1,527; திருநெல்வேலி-2539; மதுரை-1,105; சென்னை கோல் பிரிவு-24; சென்னை பாதுகாப்பு மற்றும் தொடர்பு பிரிவு-180;  தொழிற்சாலை ஒருங்கிணைப்பு பிரிவு-27; மேட்டூர்-352; எண்ணூர்-14; தூத்துக்குடி-182; திருநெல்வேலி -46; திருமாகோட்டை காஸ் மின்உற்பத்தி நிலையம்-27; திருநெல்வேலி உற்பத்தி-70 என மொத்தம் 24,629 ஆகும். இந்த சிம்கார்டில் அளவில்லாமல்  பேசும் வசதி, இந்தியா முழுவதும் ரோமிங் அழைப்பு இலவசம், 5ஜிபி இன்டர்நெட், தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் இடம்பெறுகிறது. தற்போது இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : PSNL ,power employees , 28 lakhs,Electricity ,Staff, BSNL SIM
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து மாநகர் காங். ஆர்ப்பாட்டம்