தலைமை நீதிபதியின் சுயமரியாதை உணர்வுக்கு பாராட்டு: கி.வீரமணி அறிக்கை

சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:குஜராத் உயர் நீதிமன்றத்திலிருந்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி, பதவி உயர்வு பெற்று சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி பொறுப்பேற்று, ஓராண்டு பணியாற்றிய நீதிபதி தஹில் ரமானி வெறும் 2 நீதிபதிகளை  மட்டுமே கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.75 நீதிபதிகள் கொண்டது சென்னை உயர் நீதிமன்றம். இது மூன்று முக்கிய பெரிய நீதிமன்றங்களில் ஒன்று. அவரது இட மாற்றத்தை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியத்தைக் கேட்டுள்ளார். அவர்கள் மறுபரிசீலனை கிடையாது  என்று மறுத்துவிட்டனர்.

உடனடியாக தனது சுயமரியாதையைக் காப்பாற்றி நீதிபதி தனது பதவி விலகல் கடிதத்தை தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ளார்.இவரது சுயமரியாதையை நாம் வெகுவாகப் பாராட்டுகிறோம்; துணிச்சலான முடிவும்கூட நீதிபதிகளை மற்ற மாநில உயர் நீதிமன்றங்களுக்கு மாற்றுவதால் ஏற்படும் தொல்லையும், வழக்கு விசாரணை சிக்கலும் ஏராளம் ஏற்படுகிறது.  அரசமைப்புச் சட்டத்தின் இந்தப் பகுதியே திருத்தப்படவேண்டும்.

Tags : Chief Justice , Appreciating , Chief Justice, Self-Esteem
× RELATED குஜராத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை...