×

கடலில் குளித்தபோது விபரீதம் கடல் அலையில் சிக்கிய 3 மாணவர்களின் உடல் மீட்பு: பெற்றோர், ஆசிரியர்கள் வேதனை

சென்னை:  திருவொற்றியூரில் கடலில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 4 பேர் இறந்தனர்.  அதில் 3 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது.சென்னை மணலி பாடசாலை தெருவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர்கள் தனுஷ் ( 15), ஜெயபாரதி (15),கோகுல் நாத்(15), சுனில்குமார் (15) ஆகிய 4 மாணவர்கள் நேற்று முன்தினம் மதியம் எண்ணூர்  விரைவுச்சாலை கே.வி.குப்பம் அருகே கடலில் குளித்தனர். அப்போது ராட்சத அலை 4 பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதை பார்த்த சக மாணவர்கள் திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து மீனவர்கள் உதவியுடன் பைபர் படகு மூலம் கடல் பகுதியில் தேடினர். அப்போது மாணவர் தனுஷ் உடல் மட்டும் கரை ஒதுங்கியது. மற்ற 3 மாணவர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

 இந்நிலையில் நேற்று சுனில்குமார், ஜெயபாரதி 2 மாணவர்களின் உடல்கள் அடுத்தடுத்து கரை ஒதுங்கியது. இதையடுத்து இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும்  மற்றொரு மாணவனின் உடல் நேற்று மீட்கப்பட்டது.  கோகுல்நாத் உடலை தேடும் பணியில் தொடர்ந்து  போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் . கோகுல்நாத் உடல் கிடைக்காததால் அவரது பெற்றோரும், உறவினர்களும்   கடற்கரையில் அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மீட்கப்பட்ட தனுஷ், சுனில்குமார், ஜெயபாரதி  ஆகியோரின் உடல்கள் அவர்கள் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது ஏராளமான மாணவர்கள் அஞ்சலி செலுத்தி கதறி அழுதனர்.   
   இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் திருவொற்றியூரையொட்டி உள்ள கடற்கரை பகுதிகளில் கடலில் குளிக்கும் மாணவர்களும் ,பொதுமக்களும் இதுபோல் ஏராளமானோர் கடலலையில் சிக்கி உயிர் இழந்துள்ளனர். இதை தடுக்கும்  வகையில் போலீசார் இங்கு குளிப்பதை தடைசெய்யவேண்டும். தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags : sea , Adultery , Physical ,Parents ,teachers, agony
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...