×

வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து முதல்வர் நாளை சென்னை திரும்புகிறார்

சென்னை: வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார்.தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்த்திட இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுமுறை பயணமாக கடந்த 28ம் தேதி முதல் இன்று வரை 13 நாட்கள் சுற்றுப் பயணம்  மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தின் போது, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளிலுள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று, அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களையும், தமிழ் அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்து, தமிழகத்தில்  தொழில் தொடங்குவதற்கு சாதகமாக உள்ள சூழலை எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார். அத்துடன் பல்வேறு தொழில் நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பங்களை  பார்வையிட்டு, அதை தமிழ்நாட்டில் செயல்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளை பற்றியும் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து நாளை அதிகாலை 2.40 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புகிறார்.

Tags : tour ,chief minister ,Chennai , overseas tour , CM tomorrow, Chennai
× RELATED வங்கி நிர்வாகிகளுடன் முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை